ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நோயாளர் காவுகை வண்டி சாரதி(Video)
மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் கொண்டுசென்ற நோயாளர் காவுகை வண்டியின் ரயர் வெடித்து வீதியில் நின்றதை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளரை நோயாளர் காவுகை வண்டியின் சாரதியும் அதில் பொறுப்பாக சென்ற வைத்தியரும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
வேலணை மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு சற்று தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பற்ற நிலையில் நோயாளர் காவுகை வண்டி
சாரதியின் சரியான பராமரிப்பின்மையால் மிக மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலிருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்கக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காலை நோயாளர் காவுகை வண்டி ஒன்று சென்றுள்ளது.
இந்த நோயாளர் காவுகை வண்டியின் ரயர் மண்கும்பான் பிள்ளையார் கோயிலை தாண்டி சிறிது தூரம் சென்றிருந்த நிலையில் வெடித்துள்ளது. இதனால் வண்டியில் இருந்த நோயாளி சிலமணிநேரம் வீதியில் பரிதவித்த நிலை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை செய்தியாக சேகரிக்க ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளரை கடுமையாக திட்டிய சாரதியும் வைத்தியரும் சைகையை காண்பித்து ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன் அவரை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
இதேநேரம் சாரதி நோயாளர் காவுகை வண்டியின் பராமரிப்பை சரியாக மேற்கொள்ளாதுள்ளமையும் 24 மணி நேரமும் சேவை செய்யவேண்டிய நோயாளர் காவுகை வண்டியின் சக்கரங்களின் ரயரை சரியாக பராமரித்து அதற்கான மாற்றங்களை செய்யாமையே இந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்துள்ளது.
இதனால் அச்சம்பவத்தை மறைக்கவே செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்க முற்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் துறைசார் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
