ஹயஸ் வாகன விபத்தில் சாரதி பரிதாப உயிரிழப்பு
வெலிக்கந்தை - கட்டுவன்வில வீதியில் ஹயஸ் வாகன விபத்தில் சாரதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிக்கந்தை - கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில் நேற்றுமுன்தினம்( 25) இடம்பெற்றுள்ளது.
பரிதாப உயிரிழப்பு
கட்டுவன்வில நோக்கிச் சென்ற ஹயஸ் வான், வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த வானின் சாரதி, வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கட்டுவன்வில, வெலிக்கந்தை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri