மன்னாரில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி - அதிஸ்டவசமாக தப்பிய சாரதி
மன்னார் - உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவர் வாகனத்திலிருந்து பாய்ந்து ஆபத்தின்றி தப்பியுள்ளார்.
இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் - உப்புக்குளம் புதிய தெரு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே தனது முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.
இதன்போது தனது வீட்டிற்குச் செல்லும் போது முச்சக்கரவண்டியின் கீழ்ப்பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளதோடு முச்சக்கரவண்டி தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.
உடனடியாக குறித்த நபர் முச்சக்கரவண்டியிலிருந்து பாய்ந்துள்ளார்.
எனினும் முச்சக்கரவண்டி முழுமையாக தீ பிடித்து எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam