மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை குடிபோதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திச் சென்ற சாரதி, கடந்த 03ஆம் திகதி நுவரெலியா பொலிஸாரால் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு
திவுலபிட்டி டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேருந்து வெளிமடையிலிருந்து நுவரெலியா வழியாக மீகமுவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த சாரதி சட்டவிரோத குடிபோதையில் வாகனத்தை செலுத்தியமையும், பேருந்தில் சாரதி இருக்கையில் பின்புறம் 750 மில்லி லிட்டர் சட்டவிரோத மதுபானத்தை தன்வசம் வைத்திருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே சாரதியை நேற்றைய தினம் (04) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது குறித்த சாரதியை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







