முச்சக்கர வண்டி விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி உயிரிழப்பு
பொல்பிட்டிய- யடிபேலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வட்டகொட நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – பொல்பிட்டிய யடிபேலிய பகுதியில், நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பொரளையைச் சேர்ந்த 53 வயதான எச்.எம்.இந்திக பிரியகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
அவர் காயமடைந்த நிலையில் கிதுல்கல தலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கர வண்டியின் பின்புற இருக்கையில் இருந்த ஒரு பெண்ணும் காயமடைந்து தலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதிக வேகத்தில் சென்ற முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் முச்சக்கர வண்டியும் வானும் கடுமையாக சேதமடைந்துள்ளது.அத்துடன் வான் சாரதி சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய போக்குவரத்துப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan