யாழில் தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம்(15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் - யாழ்ப்பாணம் தனியார் பேருந்தினை மறித்து 3பேர் கொண்ட குழுவினர், பேருந்தின் நடத்துனர் மீதும் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இரகசிய தகவல்
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்றையதினம் உரும்பிராய் பகுதியில் வைத்து, பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில், இன்னொருவரின் தூண்டுதலின் பேரிலேயே தாங்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 17.04.2024 அன்று இடம்பெற்ற நிலையில், குறித்த சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கோரி தனியார் பேருந்து சங்கத்தினர் கடந்த 20.04.2024 அன்று போராட்டமொன்றினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri