பட்டாசுகள் கொளுத்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிய லொறி!
தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் கொளுத்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (20) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் பற்றவைத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது, நகர மையத்தின் வழியாக அதிக வேகத்தில் சென்ற லொறி மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற சந்தேகநபர் தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள வீட்டொன்றில் மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri