போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு
ஹமாஸ் ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியது என்று கூறி,நேற்று(19) வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், காசாவில் போர்நிறுத்தத்தை மீண்டும் செயற்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் காசாவிற்குள் நுழையும் உதவியை நிறுத்துவதற்கான முந்தைய அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டதா என்பதை அறிக்கை நேரடியாகக் குறிப்பிடவில்லை.
ரஃபாவில் தனது துருப்புக்களை நோக்கி "பயங்கரவாதிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, இஸ்ரேல் முன்னர் தெரிவித்திருந்தது.
தாக்குதல்
இதன்போது இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்து, இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காசாவில் தாக்குதல்களை தொடங்கியது.
எனினும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் எந்தவொரு மோதல்கள் குறித்தும் தமக்கு தெரியாது என்று ஹமாஸ் கூறியுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலைக்குள், காசா முழுவதும் ஹமாஸ் இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது.
இந்த தாக்குதல்களில் 44 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan