சட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த உழவு இயந்திர சாரதி கைது!
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்துடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரினரால் நேற்று (24.11.2022) இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை
இதன்போது அச்செழு பகுதியைச் சேர்ந்த சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மண் ஏற்றிவந்த உழவு இயந்திரத்துடன் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி:கஜிந்தன்
நெல் ஏற்றிச்சென்ற லொறியுடன் ஒருவர் கைது
வவுனியாவில் உள்ள தனியார் நெல் களஞ்சியசாலையில் இருந்து பொலநறுவைக்கு நெல் மூடையினை ஏற்றி சென்ற லொறி ஒன்று நேற்று (24.11.2022) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
பாவனைக்கு உதவாத வகையில் இருந்த16,000 கிலோகிராம் எடையையுடைய நெல் ஏற்றிச்சென்ற லொறியொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஈரற்பெரியகுளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே சரக்குகளை ஏற்றிச் சென்ற லொறியும், லொறியின் பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நெல் இருப்பு லொறி மற்றும் நெல் இருப்புக்களை ஏற்றி சென்ற நபரும் இன்று (25.11.2022) வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
செய்தி: சதீஸ்

வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri