சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச்சூடு: சாரதி கைது(Photos)
கொடிகாமம் - கலப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இராணுவம் கைது செய்ய முயன்ற வேளை, அகழ்வில் ஈடுபட்டோர் தப்பிச் செல்ல முயன்ற சமயம் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மீது 6 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த உழவு இயந்திரச் சாரதி கைது செய்யப்பட்டபோதும், ஏனையோர் தப்பி ஓடியதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியும்
இராணுவத்தினரால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

அடுத்த 18 நாட்களுக்கு மோசமான விளைவுகளை சந்திக்க போகும் ஐந்து ராசிக்காரர்கள்! யாருக்கு பணம் தேடி வரும் தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? Cineulagam
