யாழில் இருந்து கொழும்பு நோக்கி வாகனப் பயணம் (Photos)
யாழில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை வரை உறவுகளுடன் உறவாடும் வாகனப் பயணம் கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறைக்கைதிகளாக நீண்ட காலமாக இருந்து வருகின்றவர்களை தத்தமது குடும்ப உறவுகள் சந்திப்பதற்கான எற்பாட்டினை மகசின் சிறைச்சாலை முன்னெத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே யாழில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை வரை உறவுகளுடன் உறவாடும் வாகனப் பயணம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கடந்த 13 முதல் 27 ஆண்டுகளாகச் சிறைச்சாலையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வு மிக்க கண்ணீர்ப் பயணத்தின் "உறவுகளுக்கு கரம்கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்" எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு நேற்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகனப் பயணம் ஆரம்பம்
யாழில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலை வரை உறவுகளுடன் உறவாடும் வாகனப் பயணம் யாழ். இராஜாவின் தோட்டத்தில் அமைந்துள்ள யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணம் யாழ். மாவட்ட காணமால் ஆக்கப்பட்டவர்களின் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
உறவினர்களை அனுப்பி வைக்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன், யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடமாகாண சபையின் அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைருவர், யாழ். மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஜெபரட்ணம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறைக்கைதிகளாக நீண்டகாலமாக இருந்து வருகின்றவர்களை தத்தமது குடும்ப உறவுகள் சந்திப்பதற்கான எற்பாட்டினை மகசின் சிறைச்சாலை முன்னெத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









