பிரான்சில் நடத்தப்பட்ட குடிநீர் பரிசோதனை!வெளியான அதிர்ச்சியூட்டும் முடிவுகள்
பிரான்ஸ் குடிநீரில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்களை பிரெஞ்சு கண்காணிப்புக் குழு கண்டறிந்துள்ளது.
பிரான்சின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு, குடிநீரை பெருமளவில் பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
பூச்சிக்கொல்லியின் தடயங்கள்
இது தொடர்பில் உணவு சுற்றுச்சூழல் மற்றும் பணியிட பாதுகாப்புக்கான தேசிய ஏஜென்சி (ANSES) கருத்து தெரிவித்துள்ளது.
அதாவது, பூச்சிக்கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனம், மெட்டாபொலைட் R417888 என அழைக்கப்படுகிறது.
நிலத்தடி நீர் ஆதாரங்கள் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரிலிருந்து பிரான்ஸ் முழுவதும் 136,000 மாதிரிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவை நாட்டில் விநியோகிக்கப்படும் மொத்த நீரில் 20 சதவீதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியது.
அதிர்ச்சியூட்டும் முடிவுகள்
இது இரண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளில் காணப்பட்டது. மேலும் இது மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிகமாகக் காணப்பட்டது.
இந்த அதிர்ச்சியூட்டும் முடிவுகள் குடிநீரில் கண்டறியப்படாத பிற இரசாயனங்கள் இருப்பதைப் பற்றிய கேள்விகளை எழுப்பும் மற்றும் நீர் நிறுவனங்களுக்கு பாரிய செயல்பாட்டு மற்றும் நிதி சவால்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேநேரம், சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் குளோரோதலோனில் வளர்சிதை மாற்றங்கள் சாத்தியமாக இருப்பதாக பிரெஞ்சு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
