இலங்கையில் 48 ஆயிரம் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
இலங்கையில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைவடைந்து வருவதாக வலய நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுசந்த மெதிவக்க தெரிவித்துள்ளார்.
சிறுபோக செய்கை
பிரதான நீர்த்தேக்கங்களின் கீழ் சிறுபோக செய்கைக்கு தேவையான நீர் எதிர்வரும் 15ஆம், 20ஆம், 21ஆம் திகதிகளில் விடுவிக்கப்படவுள்ளது.
இதேவேளை எந்தவொரு வைத்தியசாலையிலோ பாடசாலையிலோ நீர்த் தேவைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படுமாயின் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நீர் தேவை
ஹம்பாந்தோட்டை தங்கல்ல வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நீர் தேவைப்பாட்டை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எந்தவொரு அரச
நிறுவனத்திற்கும் அல்லது ஏனைய நிறுவனங்களுக்கும் உடனடியாக குடிநீர்
விநியோகிக்கப்படும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்தார்.