கொழும்பில் சொந்த வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! கனவு நனவாகிறது..
குறைந்த வருமானம் உடைய மற்றும் வீடற்ற 2,500 குடும்பங்களுக்கு, 2026ஆம் ஆண்டிற்குள் புதிய வீடுகள் வழங்கப்படும் என நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் இந்நடவடடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (16) கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் கட்டுமானத்திலுள்ள ‘ஸ்டேடியம்கம’ (Stadiumgama) வீடமைப்புத் தொகுதியை நேரில் பார்வையிட்ட போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
வசதிகள்
மேலும், "வீடுகளை வழங்குவது என்பது வெறும் கட்டிடங்களை வழங்குவது அல்ல, அவை மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய முழுமையான குடியிருப்புகளாக இருக்க வேண்டும்.

மக்கள் குடியேறுவதற்கு முன்னர் பாதுகாப்பு, சமூகத் தேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இவ்வருடத்தில் மூன்று வீடமைப்புத் திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொழும்பில் மொத்தம் 7,000 புதிய நகர்ப்புற வீடுகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தனி வீடுகளில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாறும் குடும்பங்கள், பொதுவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் வாழ வேண்டும்.
குடியிருப்பாளர்களின் சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தேவைப்பட்டால் தற்போதைய சட்டதிட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam