இலங்கையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் - அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் சாதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுமார் 10 மாதங்களின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதியான சூழல் உட்பட பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2022 செப்டம்பரில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த பெப்ரவரிக்குள் 23.5% இனால் அதிகரித்து 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டு கையிருப்பு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2022 செப்டம்பரில் 94.9% ஆக இருந்த மொத்த பணவீக்கம் 2023 ஜனவரியில் 60.1% ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், கடந்த 2022 செப்டம்பரில் 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261% இனால் அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரிக்குள் 107,639 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த பல முக்கிய தீர்மானங்களினால் இந்த அபிவிருத்திகள் அனைத்தும் சாத்தியமானதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
