புலம்பெயர்ந்த மக்களின் நிதியை கொண்டு வருவதற்கான நாடகம் அரங்கேறுகின்றது: பா. அரியநேந்திரன் குற்றச்சாட்டு (Video)

Tamils Ranil Wickremesinghe Tamil diaspora President of Sri lanka
By Bavan Oct 20, 2022 08:38 AM GMT
Report

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடந்த 1946ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு வரை சில குழுக்களால் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு சர்வதேச மற்றும் உள்ளூர் ரீதியான பேச்சுவார்த்தை இடம்பெற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று (19.10.2022) கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மயில்வாகனம் நிமலராஜன் சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளராக இருந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததன் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டார்.


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்

கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் க.தேவராஜா, அம்பாறை - கொண்டைவெட்டுவான் படை முகாமில் வைத்து முதலாவதாக கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் 37 பேரும், சிங்கள ஊடகவியலாளர்கள் 8 பேரும், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் 2 பேருமாக மொத்தம் 47 ஊடகவியலாளர்களை இந்த நாட்டில் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சி செய்த ஜனாதிபதி யாராக இருந்தாலும் இந்த சம்பவம் தொடர்பில் இது வரை நீதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் சர்வதேசத்தின் ஊடாக பல ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஜெனிவாவில் நீதி கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். 

ஜனாதிபது ரணில் விக்ரமசிங்க

புலம்பெயர்ந்த மக்களின் நிதியை கொண்டு வருவதற்கான நாடகம் அரங்கேறுகின்றது: பா. அரியநேந்திரன் குற்றச்சாட்டு (Video) | Drama Is Being Staged To Bring Funds The Diaspora

இப்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.

இவர் சாதாரண ஒரு வேட்பாளராக இருந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற முடியாது தோல்வியுற்று அதன் பின்னர் தேசியப்பட்டியில் உள்நுழைந்து இன்று மாபெரும் அதிஷ்டம் கிடைத்த ஜனாதிபதியாக இருக்கின்றார்.

உண்மையிலேயே அவரின் காலத்தில் கூட பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அவருக்குத் தெரியும். பொருளாதாரம் இல்லாது நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது.

இலங்கையின் பொருளாதாரம்

இந்தநிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் எமது ஜனாதிபதி ரணில்.

புலம்பெயர்ந்த மக்களின் நிதியை கொண்டு வருவதற்கான நாடகம் அரங்கேறுகின்றது: பா. அரியநேந்திரன் குற்றச்சாட்டு (Video) | Drama Is Being Staged To Bring Funds The Diaspora

தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்கப்பட வேண்டும், என்ன வழங்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் நன்கு அறிவார். ஆனால் காலத்தை நீடித்து புலம்பெயர்ந்த மக்களின் நிதியை கொண்டு வருவதற்கான நாடகம் அரங்கேறுகின்றது.  

அதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ரணில் தலைமையில் அமைச்சரவை உப குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது வேடிக்கைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US