மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் முள்ளிப்பொத்தானை மக்கள் - அரசிடம் விடுத்த கோரிக்கை
முள்ளிப்பொத்தானை - கண்டி பிரதான வீதியில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வீதியோர மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈச்சன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் செல்லும் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறும் வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வடிகால் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முள்ளிப்பொத்தானை - கண்டி பிரதான வீதியில் தேவையான முக்கிய வடிகால்களை உடனடியாக அடையாளம் கண்டு, முறையான மற்றும் நீடித்த வடிகால் வசதியை ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த கோரிக்கைக்கு உரிய கவனம் செலுத்தி, முள்ளிப்பொத்தானை மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan