தனக்கு கிடைத்த நிலுவை சம்பளத் தொகையை சுகாதார அமைச்சுக்கு கொடுத்த வைத்தியர் ஷாபி
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தனக்கு கிடைத்த நிலுவை சம்பளத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி, தனக்கு வழங்கப்பட்டுள்ள 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதம் சம்பள நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார்.
பெருமளவிலான தாய்மாருக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, பணி இடைநிறுத்தப்பட்டிருந்த வைத்தியர் ஷாபி, தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுவதுமாக வெளிவந்துள்ளார்.
நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவு
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஷாபி ஷிஹாப்தீனை மீள பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, பணி இடைநிறுத்தப்பட்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
அதன்படி, வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதியை அவர் த்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்க தீர்மானித்துள்ளார்.


ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
