மருத்துவர் சமல் சஞ்சீவ பணியிடை நீக்கம்
பிரபல சமூக ஆர்வலரான மருத்துவர் சமல் சஞ்சீவ, சுகாதார அமைச்சினால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அவர், சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களை மீறி தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 2022ம் ஆண்டு இலங்கையில் சிறுவர்களின் மந்தபோஷாக்கு தொடர்பாக பரபரப்பான கருத்து ஒன்றை வெளியிட்டதன் காரணமாக மருத்துவத்துறைக்குள் மருத்துவர் சமல் சஞ்சீவ மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
பணியிடை நீக்கம்
அதன் பின்னரும் மருத்துவத்துறையில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருந்ததன் காரணமாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் அவருடன் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில், அரசாங்க மருத்துவ அதிகாரியாக இருந்து கொண்டு , தேர்தலில் போட்டியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் , அதன் பின்னர் அது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்திருப்பதாகவும் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan

திருமணம் செய்து கடுமையாக பாதிக்கப்பட்டேன், என் கணவருடன் அதை வெளியிட்டால்.. பிரியாமணி எமோஷ்னல் பேட்டி Cineulagam
