நாடாளுமன்ற வளாக பொதுக் கழிப்பறை குறித்து அர்ச்சுனா விடுத்த கோரிக்கை
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசல கூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளையின் கீழ் தெரிவித்துள்ளார்.
இன்று(25.09.2025) காலையில் ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைளை தொடர்ந்து நிலையியற் கட்டளையில் குறிப்பிட்டுள்ளதன்படி நாடாளுமன்ற கட்டட முகாமைத்துவத்திற்கு பொறுப்பானவர் சபாநாயகர் என்ற வகையில் தனது கேள்வியை கேட்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார்
தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசல கூடம் உடைக்கப்பட்டு களவாடப்படுவதால் பொது மலசல கூடங்கள் நான்கு மணிக்கு மூடப்படுகிறது.
அதனால் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் தங்களின் இயற்கை கடமைகளை முடித்துக் கொள்ள அவஸ்தைப்படுவதோடு பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதால் அதை இரவும் திறந்து வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரித்த நிலையில், அர்ச்சனா எம்.பி. பொலிஸார் படும் கஷ்டங்களையே சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



