ஜனாதிபதியின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! ஹர்ச டி சில்வா
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு இலங்கையிடம், அமெரிக்கா கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைத்து ஜனநாயக உரிமைகளை பறிக்க வேண்டாம் என அமெரிக்காவின் பிரதான செனட் சபையின் தலைவர் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேர்தல் என்பனவற்றை ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.
ஜனாதிபதியின் வாதம்
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டியிருப்பதனால் தேர்தலை நடத்த முடியாது என்ற ஜனாதிபதியின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரரான அமெரிக்காவின் விக்டோரியா நூலாண்ட் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து தேர்தலை நடத்துமாறு கோரியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் பொப் மெனென்ட்ஸும் தேர்தலை காலம் தாழ்த்தாது நடாத்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
எனினும் நாட்டின் ஜனநாயகத்தை சர்வாதிகாரம் மூலம் நசுக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
