யாழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த வைத்தியர்! காரணம் இதுதான்(Photos)
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வைத்தியர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
தனது அயராதசேவை மூலம் மக்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
வைத்தியர் அருளானந்ததிற்கு இப்போது 81 வயதாகிறது.


இலவசமாக சிகிச்சை
இந்த வயதிலும் தினமும் காலை 7 மணி தொடக்கம் பகல் 2 மணிவரை தனது வைத்திய நிலையத்தைத் திறந்து, சேவை புரிந்து வருகிறார்.
மிகவும் குறைந்த கட்டணத்துடன் மருத்துவம் பார்ப்பதுடன் வறியவர்கள், தூர இடங்களில் இருந்து வருவோர் போன்றவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளிப்பது இவரின் சிறப்பம்சமாகும்.


இவரைப்பற்றி வெளியான காணொளி ஒன்றின் கீழே, ‘இவர் ஒரு மனிதக் கடவுள்’ ‘ஐயாவிடம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் நானும் ஒருவன். மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குகிறார்’ போன்ற பல பின்னூட்டங்களைக் காணமுடிந்தது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri