ஒரு சிலரின் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் : டக்ளஸ் தேவானந்தா
தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும்.
இல்லையேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சிலர் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதுடன் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பலதரப்பட்டவர்களுடனான
சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri