இத்தாவில் மாதுளைச்செய்கை தோட்டத்திற்கு டக்ளஸ் விஜயம்
கிளிநொச்சி (Kilinochchi) - பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதுளைச்செய்கை மாதிரித் தோட்டத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பார்வையிட்டுள்ளார்.
பளை - இத்தாவில் கிராமத்தில் முன்னெடுக்கப்படும் மாதுளை பயிர்ச்செய்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, குறித்த பயிர்ச்செய்கையில் அறுவடைக்காலம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடுபயிர் செய்கையின் பெறுபேறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து
எதிர்கொள்ளும் சிரமங்கள்
இந்நிலையில், அறுவடைகளை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பொதுவான விற்பனை மையம் தொடர்பிலும் இடர்பாடுகள் குறித்தும் விவசாயிகள் அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, குரங்குகளால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து சுட்டிக்காட்டிய மக்கள், அவற்றுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைக்கமைய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அமைச்சர் விவசாயிகளிடம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |