பயணிகள் முறையீடு: யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு டக்ளஸ் விஜயம்
யாழ்ப்பாணம்(Jaffna) மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) திடீர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்று(31.05.2024) மாலை அமைச்சர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
இந்த நிலையில், அங்கு காணப்படும் அசுத்தமான சூழலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளருடனும் தொடர்பு கொண்டு நிலைமைகள் தொடர்பாக பிரஸ்தாபித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |