சுயநல அரசியல் எங்களுடையதல்ல: டக்லஸ் தரப்பு எடுத்துரைப்பு
நாம் யாருக்கும் முகவர்களாகவோ, சுயநலத்துக்காகவோ சேவைகளை முன்னெடுப்பதில்லை எனவும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமான செயற்பாட்டைக் கொண்ட கட்சியாகும் என்றும் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணத்தில் சுயாட்சி
“மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி” என்ற அரசியல் இலக்குடன் இணக்க அரசியலினூடாக டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக மக்கள் சேவையாற்றி வருகின்றார்.
அவர் 30 ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அங்கம் வகித்துவருகின்றார்.
இதில் ஜனாதிபதிகளாக சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்திலும், அதன்பின்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலும் அமைச்சராகவே இருக்கின்றார்.
தமிழ் மக்களின் அன்றாடப்பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமை ஆகியவற்றை நோக்காகக் கொண்டு ஈ.பிடி.பி தனித்துவமான முடிவுகளை மக்கள் நலன்சார்ந்து தேர்ந்தெடுத்து தனது அரசியல் வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கிவருகின்றது.
ரணில் விக்ரமசிங்க
இத்தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த பல ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டாலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
எனவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் நலன்சார்ந்து முடிவுகளை எடுக்குமே தவிர எவரது முகவர்களாகவும் செயற்படாது.
சமீபத்தில் சிவில் அமைப்பபுகள் என்று கூறிக்கொள்பவர்களும் சிதறுண்டுபோய் இருக்கின்ற ஏழு குழுக்களும் செய்துகொண்ட ஒப்பந்தமானது மாறிமாறி வந்த அரசுகள் தமிழ் மக்களை ஏமாற்றியது என்பதற்கு அப்பால் இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள் என்பதற்கான உதாரணமாகும்.
இரண்டு நாடுகள் ஒப்பந்தம் செய்வதும் இரண்டு இனம், இரண்டு சமயத்தவர்கள் இரண்டு பிரிவினர் தங்களுக்குள் இணக்கமற்ற சூழல் நிலவுகின்றபோது பொது உடன்படிக்கை செய்துகொள்வது இயல்பானது.
ஆனால் இங்கு ஏழு குழுக்கள் கட்சியாகவும், சிவில் சமூகத்தவர்கள் என்ற சிலரும் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பெரிதாக ஓர் ஒப்பந்தம் செய்தகொண்டதாக புழகாங்கிதம் அடைந்துவருகின்றனர்.
தமக்குள் ஒற்றுமையின்மை நிலவுவதால் பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக
சிதறுண்டிருக்கின்ற கட்சிகளை ஒற்றுமைப்படுத்தலாம் என புளொட் அமைப்பின் தலைவர்
சித்தார்த்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்ததன்
பின்னர் இப்போது சிவில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமத் செய்ததாகவும்
ஏதோ இணக்கப்பாடில்லாத இரு தரப்பினரை ஒருநிலைப்படுத்திய பிரமிதத்தில்
கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |