றெமிடியஸ் சட்டத்தரணியின் இழப்பு: சோகத்தை பகிர்ந்த டக்ளஸ்
ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக 25 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த போராளியான தோழர் றெமிடியஸ் சட்டத்தரணியின் இழப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு பேரிழப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பாசையூர் சென். அன்ரனிஸ் மைதானத்தில் நேற்று (15.02.2023) நடைபெற்ற றெமிடியசின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகளுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் யாழ்ப்பாண வீதிகளில் குரல் எழுப்பி ஒரு தீப்பிழம்பாக ஜொலித்து நின்றவர் தோழர் றெமிடியஸ் சட்டத்தரணி.
சமூக ஆர்வலராக செயற்பட்ட சட்டத்தரணி
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்கள் முகம்
கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் சரியான இடம் ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சிதான் என்பதை ஆராய்ந்தறிந்து, அதில் தன்னையும் இணைத்துக் கொண்டு
செயற்பட்டார்.
சட்டத்தரணியாக தனது தொழிலை வெறுமன பணம் சேர்க்கும் ஒரு மார்க்கமாகப் பார்க்காமல் தன்னைத் தேடிவந்து உதவி கேட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கவும், விடுதலை கிடைக்கவும் தன்னால் முடிந்ததைச் செய்த மனித நேயம் கொண்டவர்.
எல்லாக் காயங்களுக்கும் காலம் மருந்து போடும் என்ற தன்னம்பிக்கையுடன் எதையும்
எதிர்கொள்ளும் தற்துணிவோடு தனது பாதையில் சென்ற ஒருவரை இவ்வளவு அவசரமாக காலன்
அழைத்துக்கொண்டு போவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
