விடுதலைப் புலிகளின் தலைவர் இந்த உலகத்திலேயே இல்லை! இதுவே உண்மை : டக்ளஸின் அறிவிப்பு
என்னை பொறுத்தவரையில் எமது அனுபவத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உலகத்திலேயே இல்லை என்பதே என்னுடைய தகவல் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு வழங்கிய செய்தியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரபாகரன் தொடர்பான தமிழக தலைவர்களின் கருத்துக்கள் இலங்கை தமிழர்களை கஷ்டத்திற்கு உட்படுத்தும்.
பிரபாகரன் இல்லை என்பதே உண்மை
பழ. நெடுமாறன் அறிந்து கதைக்கின்றாரா? அறியாமல் கதைக்கின்றாரா? என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் என்னை பொறுத்தவரையில் எமது அனுவத்தில் பிரபாகரன் உலகத்திலேயே இல்லை என்பதே என்னுடைய தகவல்.
அதை நான் நம்புகின்றேன். நான் குறுட்டுத் தனமாக நம்புவதோ, பொய்யாக பேசுவதோ இல்லை.
இவர்களின் இப்படியான கருத்துக்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன்பு சாதகமாக இருந்தது. ஆனால், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பிறகும் அதை அவர்கள் தொடரும் போது, இங்குள்ள தமிழ் மக்கள் தான் கஷ்டப்பட போகின்றார்கள்.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று நாம் எவ்வளவு சௌகரியமாக இருந்திருப்போம். பிரபாகரன் இல்லை என்பதே உண்மை.
ஆனால் அவர் என்ன மாதிரி இறந்தார் என்றதில் வாத பிரதிவாதங்கள் இருக்கின்றன. அதைப்பற்றி நான் இப்போது கதைக்க விரும்பில்லை என குறிப்பிட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
