வடக்கு மக்களுக்காக ஜனாதிபதிக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம்

Anura Kumara Dissanayaka Douglas Devananda President of Sri lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 10, 2024 12:22 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில், கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசு செய்து, அனுமதிபெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய காலமற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய அவர் சுட்டிக்காட்டியுள்ள வேலைத் திட்டங்கள் பின்வருமாறு, 

01. வன ஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல்.

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஐரோப்பா செல்ல முற்பட்ட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வீட்டு நிர்மாணங்கள் 

02. முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல்.

வடக்கு மக்களுக்காக ஜனாதிபதிக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம் | Douglas Sent A Letter To Anura Kumara

03. இந்திய முதலீட்டுடன் சூரியமின் சக்தி உற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல்.

04. வடக்கில், சன் பவர் சூரியமின் சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல்.

05. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06. நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியை அமைத்தல்.

07. ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து, உறுதிபடுத்தல்.

சுற்றுலாத் துறை

08. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்க பாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல்.

வடக்கு மக்களுக்காக ஜனாதிபதிக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம் | Douglas Sent A Letter To Anura Kumara

09. அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல்.

10. இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சீமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையை விரைந்து ஆரம்பித்தல்.

11. பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல்.

13. பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத்திட்டத்தையும் விரைவுபடுத்தல்.

14. சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

அநுரவுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள விமல்

அநுரவுக்கு ஆதரவாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள விமல்

இந்திய இழுவைமடி படகுகள் 

15. உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல்.

வடக்கு மக்களுக்காக ஜனாதிபதிக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம் | Douglas Sent A Letter To Anura Kumara

16. உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல்.

17. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய இழுவைமடி வலைப்படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல்.

18. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகிய பகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களை அமைத்தல்.

19. வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்.

21. முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல்.

22. கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல்.

23. கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றை செயற்படுத்தல்.

24. புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

13ஆவது திருத்த சட்டம் 

25. வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல்.

வடக்கு மக்களுக்காக ஜனாதிபதிக்கு டக்ளஸ் அனுப்பியுள்ள கடிதம் | Douglas Sent A Letter To Anura Kumara

26. வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல்.

27. வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல்

28. அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல்.

29. காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30. பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல்

31. சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல்

32. கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33. அரசியலாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல். 

வடக்கு பகுதி மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்குறிப்பிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

கட்டுப்பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

கட்டுப்பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US