இரணைதீவில் 3ஆவது நாளாக தொடரும் போராட்டம்
யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கான சுமூகமான சூழல் உருவாகும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும், வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் அவர்களினதும் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டபோதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் தலைவர் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன் என்பது குறிப்பிடத்தக்கது.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
