கிளிநொச்சிக்கு எமது கட்சி அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்துள்ளது: டக்லஸ் எடுத்துரைப்பு
கிளிநொச்சி மாவட்டத்திற்கு எமது கட்சி பல்வேறு வழிகளில் அபிவிருத்தியையும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த செயலார் நாயகம்,
யுத்த பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டம் என்பது பல்வேறு அழிவு யுத்தத்தை அதிகளவு பாதிப்புகளை கண்ட மாவட்டமாகும்.
அதேபோன்று இங்குவாழும் மக்களும் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்தவர்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாற்றம் கண்டுவருகின்றது.
இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு எமது கட்சி பல்வேறு வழிகளில் அபிவிருத்தியையும் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கி
இதற்கு இன்றைய கிளிநொச்சி நகரமே சாட்சி சொல்லும். இதேநேரம் தற்போது இதுவரைகாலமும் தம்மை போலித் தேசியவாதம் ஏமாற்றிவந்துள்ளது என்பதையும் இம்மாவட்ட மக்கள் அடையாளம்கண்டு அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
இந்த மாற்றம் இம்முறை ஈ.பி.டி.பியை நோக்கியதாபகவே இருக்கின்றது. இந்த மாற்றம் உங்கள் உறவுகள், உங்கள் கிராமங்கள், உங்கள் பிரதேசங்கள் என பரவலாக விரிவடைவதனூடாகவே முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அத்துடன் அந்த மாற்றத்தை உங்களால் எற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
