காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் வலியுறுத்தல்
காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
காணாமல்போன உறவுகளின் வலியையும் வேதனையையும் உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முகம் கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்பார்ப்புகள் சுமக்கிறோம்
காணாமல்போனவர்களின் உறவுகள் நீண்டகாலமாகத் தங்களது அன்பானவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல், பல்வேறு இன்னல்களையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகின்றமையை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்களை உடனடியாக அடையாளம் கண்டு, எந்தவித பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றார்.
தாமும் காணாமல்போனவர்களின் உறவுகளைப் போன்றே வலிகளை உணர்ந்தவர் என்ற அடிப்படையில், அவர்களின் உணர்வுகளையும் வேதனைகளையும் முழுமையாகப் புரிந்துகொண்டு, உரிய தரப்பினர் அவர்களுக்கு நீதி வழங்க முன்வர வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening