கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு களவிஜயம்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களை பார்வையிட்டுள்ளதுடன் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வளங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தினை பெருக்கலாம் என்பது தொடர்பில் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத தொழில் அதிகரிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழிலால் பாதிக்கப்படுகின்ற மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.ஒரு முன்னேற்றத்தினை நோக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மீனவர்களுக்கான எரிபொருளினை வழங்கி வருகின்றது.
மீனவர்களின் தொழில் நடவடிக்கையில் மாற்றுத்தீர்மானம் தொடர்பில் யோசித்துள்ளோம். நீர்வேளாண்மையான கடல் அட்டை வளர்ப்பது, இறால் வளர்ப்பது,கூடுகளுக்குள் மீன் வளர்ப்பது என்பன உள்ளன.
வரவு செலவுத்திட்டத்தில் புதிய திட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள களப்புகளை ஆராய்ந்துள்ளோம்.களப்புகளை அபிவிருத்தி செய்தால் இங்குள்ள மக்களுக்கு எரிபொருள் இல்லாவிட்டாலும் அதில் அவர்கள் தொழில் செய்யக்கூடியவாறு இருக்கும்.
வட்டுவாகல்,சாலை,நாயாறு,கொக்குளாய் கடல் நீர் ஏரிகளை பார்வையிட்டு மாற்றங்களை கொண்டுவருவதற்கான முடிவு எடுக்கப்பட்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அடுத்த ஆண்டு மாசி,பங்குனியில் அந்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க முடியாமல் தமது குடும்பத்தினை எவ்வாறாயினும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரில் வைத்து கைது செய்யப்பட்ட 38 பேரையும் விடுவிக்குமாறு அவர்களது உறவினர்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



நீதிபதிக்கே கிடைக்காத நீதி.. 1 நாள் முன்

சீரியலுக்கு வருவதற்கு முன் வேறு மாதிரி நடித்த ஆதிகுணசேகரனின் தம்பி... கைகொடுத்த எதிர்நீச்சல் Manithan

கனடாவில் வாழ்வைத் துவக்கலாம் என்னும் ஆசையிலிருக்கும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
