ரணிலின் இந்த ஆட்சி தொடராவிட்டால் நாடு மீண்டும் படுகுழியில் விழும்! டக்ளஸ் எச்சரிக்கை
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடராவிட்டால் அதளபாதாளத்தில் நாடு மீண்டும் விழும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று(10.09.2024) பிற்பகல் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
"கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காகக் காத்திருக்க வேண்டும்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும். உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும்.

அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு மீண்டும் விழும்.
அதனை உணர்ந்து ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவு செய்ய வேண்டும்.
எங்களை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.
நமது அரசியல் தலைமைகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் உறவை வைத்துக் கொண்டு தமது சுயலாபங்களைப் பெற்ற பின்னர் அரசு ஏமாற்றிவிட்டது என்று மக்களைப் பலர் ஏமாற்றுவார்கள்.

நாம் அவ்வாறு ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை. நாம் சொல்வதைத்தான் செய்வோம்.
ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்."என அவர் தெரித்துள்ளார்.
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri