பாடசாலை அதிபரால் தாக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
நுவரெலியா (Nuwara Eliya) கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் அடித்ததில் ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சை எழுதவுள்ள 07 மாணவர்கள் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் நுவரெலியா வலயக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
போராட்டம் முன்னெடுப்பு
எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று (11.09.2024) போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,
கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு மாணவர்களை பிரம்பால் அதிபர் தாக்கியுள்ளார்.
இதனால், அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதுடன், அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதிபர் இடமாற்றம்
இந்நிலையில், தற்போதுள்ள அந்த அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்க கோரியும் இவ்விடயம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை அதிபரை இடமாற்றம் செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையாலும் போராட்டம் முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும், ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடன் இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாடசாலையில் இருந்து குறித்த அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் அழைத்துச் சென்றதன் பின்னரே போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
