வடமராட்சி கிழக்கில் பொதுமக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய விசேட கலந்துரையாடல்
வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான தடைகளை அகற்ற வேண்டிய
ஏதுநிலைகளை ஏற்படுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட காணிகள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சிரமத்தில் மக்கள்
இதனால், குறித்த காணிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாதுள்ள நிலையை கருத்திற்கொண்டு அவ்வாறான இடையூறுகளை அகற்றி கொடுக்கும் முமாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |