தமிழ் மக்களின் தாகங்கள் தீர்க்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மூலம் தமிழ் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
தாழையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (02.08.2024) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“நீர் தாகத்தினை போன்று எமது மக்கள் பல்வேறு தாகங்களோடு காணப்படுகின்றனர். அதாவது, அரசியல் சமவுரிமை பற்றிய தாகம், அபிவிருத்தி ஊடான அழகிய தேசத்தை கட்டியெழுப்பும் தாகம், அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான தீர்விற்கான தாகம் போன்றவற்றுடன் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் மக்கள் எம்மோடு அணிதிரளும் பட்சத்தில் அனைத்து வகையான தாகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
