டக்ளஸின் கைது பழிவாங்கல் அல்ல.. தமிழரசு கட்சி சார்பில் தெரிவிப்பு
வடக்கிலும் கிழக்கிலும் யார் கைது செய்யப்பட்டாலும் சட்டத்திற்குட்படுத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
படுகொலைகள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "டக்ளஸின் கைதை எதிர்க்கட்சிகள் சார்பாக அரசியல் பழிவாங்கல் என்று சொல்வதை நாங்கள் விரும்பவில்லை.

கிழக்கில் நடந்த படுகொலைகளிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும்.
அவர்களை பழிவாங்குவதாக நாங்கள் கருதவில்லை. அதேவேளை, மட்டக்களப்பு தொடருந்து சேவை பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. அதன் குறைபாடுகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும்” என சுட்டிக்காட்டினார்.
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri