பங்களாதேஷ் வீரரின் பந்துவீச்சு முறை குறித்து வெளியிடப்பட்ட சந்தேகம்
பங்களாதேஷ் (Bangladesh) கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை ஆட்ட வீரர் சகிப் அல் ஹசனின் (Shakib al Hasan) பந்து வீச்சு முறை குறித்து ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கவுண்டி செம்பியன்சிப்பில் போட்டி தொடரில் சர்ரே அணியுடனான ஆட்டத்தின்போது, அவருடைய பந்து வீச்சு முறை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.
சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விவாதங்கள்
நடுவர்களால் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து, அவரது பந்துவீச்சு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
37 வயதான பங்களாதேஷ் வீரர், இந்த கவுண்டி பருவத்தில் இதுவரை 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இந்தநிலையில் அவர், அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட வசதியில் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி பகுப்பாய்வு செயற்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
