வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 700 மருத்துவர்கள்-இலங்கை திரும்புவார்களா என்பது சந்தேகம்
வெளிநாடுகளுக்கு சிறப்பு மருத்துவ பயிற்சிகளுக்காக சென்றுள்ள 700 இளம் மருத்துவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வராத ஆபத்து இருப்பதாக அரச மருத்துவர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களில் நாட்டை விட்டு சென்றுள்ள 500 இளம் மருத்துவர்கள்
இதனை தவிர சுமார் 500 இளம் மருத்துவர்கள் கடந்த ஆறு மாதங்களில் நாட்டை விட்டு சென்றுள்ளனர் என அரச மருத்துவர்கள் ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் நிலையான கொள்ளை இல்லாததன் அதிருப்தி, வெளிநாடுகளில் இருக்கும் சிறப்பான வரவேற்பு என்பன இந்த நிலைமைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சேவை காலம் 60 ஆண்டுகளாக வரையறுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டமை மருத்துவர்கள் அதிருப்தியடைவதற்கான அண்மைய காரணம்.
சிறப்பு மருத்துவர்களின் சேவை காலம் நீடிக்கப்பட்டமை தொடர்பாக அரச மருத்துவர்களின் ஒன்றியம் சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் மருத்துவர் பெல்லன மேலும் கூறியுள்ளார்.