கட்டுநாயக்கவில் தரையிறங்கிய இந்திய இராணுவ விமானம்
இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இந்திய கடற்படையின் டோர்னியர் விமானம் இன்று (16.08.2023) தரையிறங்கியுள்ளது.
இதன்மூலம் இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தியதில் ஒரு முக்கிய தருணம் வெளிப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதில் தலைமைப் பணியாளர்கள் மற்றும் இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஸ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவின் அர்ப்பணிப்பு வலியுறுத்து
"கடந்த ஆண்டு இந்தியா இலங்கைக்கு வழங்கிய விமானங்களின் வரிசையில் இந்த விமானமும் அடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் தீவின் வளர்ச்சி மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு வெளிப்படுத்திள்ளது.
இன்று இலங்கைக்கு வழங்கப்பட்ட, அதிநவீன டோர்னியர் கடல்சார் உளவு விமானம், இலங்கையின் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தி, விமானப்படையின் பலத்தை பெருக்கும்." என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை வளர்க்கும் திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடல்சார் பாதுகாப்பில் பகிரப்பட்ட முயற்சிகள், டோர்னியரின் வருகையால் மேம்பட்டுள்ளது எனவும் அத்துடன் இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலில் கொள்கையை எதிரொலிக்கிறது என்றும் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.
You May like this






