நிதி அமைச்சை நம்ப வேண்டாம் என அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
நிதி அமைச்சை நம்ப வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சினால் வழங்கப்படும் புள்ளிவிபரத் தகவல்களின் துல்லியத் தன்மை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும் எச்சரித்துள்ளார்.

துல்லியத்தன்மை குறித்து கவனம்
நிதி அமைச்சின் அதிகாரிகளே தாங்கள் வழங்கும் தகவல்களில் தவறு காணப்பட்டதனை கடந்த காலங்களில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த தரவுகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் தமது உரையில் பயன்படுத்திய புள்ளிவிபரத் தரவுகளின் துல்லியத்தன்மை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri