களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள்: மேர்வினுக்கு தமிழர் தரப்பு சவால்(Video)
களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள். முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள். வந்து தலையை கொய்யுங்கள் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் மேர்வின் சில்வாவுக்கு சவால் விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (16.08.2023)இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விந்தன் கனகரட்ணம் இந்த பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களுக்கு வன்முறை ஊறிப்போனது. எங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோதே நாம் வன்முறையை கையில் எடுத்தோம்.
உங்களுக்கு ஆலயங்கள் பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது இயல்பு. களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள் முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள் .வந்து தலையை கொய்யுங்கள்.
நீங்கள் வாளுடன் வரும் போது நாம் என்ன செய்வோம் என்பதை அப்போது பாருங்கள் எனவும் தெரிவித்தார்.



