சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி வழங்கப்பட்டாலும் ஏற்கத் தயாரில்லை: பொன்சேகா அதிரடி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் வழங்கப்பட்டாலும் அதனைப் பொறுப்பேற்பதற்குத் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ( Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீண்ட காலம் அரசியல் செய்தவர்.
மே தினக் கூட்டம்
எனவே, சுதந்திரக் கட்சியில் அவர் போசகர் என்ற பதவி நிலையில் இருக்க வேண்டும். அந்தப் பதவியில் இருந்து தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.
ஆனால், மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அவரைப் பற்றி கருத்து வெளியிட்டு எனது நேரத்தை வீணடிக்கத் தயாரில்லை.
அதேவேளை, மே தினக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் செல்வதற்கு நான் தயாரில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் களனி தொகுதிக்கான அமைப்பாளர் என்ற வகையில் அந்தக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |