கரு ஜயசூரியவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவசர கடிதம்
முன்னாள் சபாயகரும் முன்னாள் அமைச்சருமான கரு ஜயசூரிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய வேண்டாம் என அவர் அந்த கடிதத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்பட்டால் அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பெரும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் இந்த ஓய்வூதியத் தொகையைக் கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
திட்வா அனர்த்தத்தினைத் தொடர்ந்து நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான பின்னணியில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் வேறும் ஓர் விடயம் தொடர்பில் ஜனாதியின் கவனத்திற்கு கொண்டு வர நேரிட்டமை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டதாகவும் மக்களின் மத்தியில் அவர்கள் தொடர்பில் பிழையான ஓர் எண்ணக்கரு உருவானதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என கரு ஜயசூரிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச தலைவர் என்ற ரீதியிலும் நாட்டின் பிரதான குடிமகன் என்ற ரீதியிலும் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகி ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ரத்து செய்யும் தீமானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளார்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam