இந்திய உதவித் திட்டத்தின் கீழ் யாழில் மாணவர்களுக்கு நன்கொடை
இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய உதவித் திட்டத்தின் கீழ் ரூபா முப்பது இலட்சம் பெறுமதியான நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று (25.09.2024) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புலமைப்பரிசில்
இந்தத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத்தூதுவர் ஶ்ரீ சாய்முரளி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உதவித் தொகைக்கான காசோலையைக் கையளித்தார்.
இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு
பல்கலைக்கழக நிர்வாகக் கட்டத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
