மன்னாரில் உள்ள கடற்றொழிலாளர் சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் கையளிப்பு
இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் 'இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும்'எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (15.02.2024) வியாழக்கிழமை மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு
இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய 4 கடற்றொழிலாளர் சமாசங்களுக்கு குறித்த குளிர்சாதன பெட்டிகள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த
நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ.சந்தோஷ் ஜா அவரது
துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜ்
பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam