இலங்கை- பாகிஸ்தான் உறவில் மீண்டும் ஆரம்பமான கண் விழி வெண்படல தானம்
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவில் கண் விழி வெண்படலங்களும் உள்ளடங்குகின்றன.
இதன்படி இலங்கை நன்கொடையாளர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஐந்து கண் விழி வெண்படலங்கள் நேற்று (20) லாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவை பாகிஸ்தான் இராணுவ மருத்துவ பணியாளர்களால் பெறப்பட்டு, ராவல்பிண்டியில் (Rawalpindi) உள்ள பாகிஸ்தான் (Pakistan) இராணுவ மருத்துவமனையில் கையளிக்கப்பட்டன.
கண் தானச் சங்கம்
சர்வதேச கண் வங்கியின் ஸ்தாபரான, மறைந்த ஹட்சன் சில்வாவினால் (Hudson Silva), 1964 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் கண் தானச் சங்கத்தின் ஊடாக உலகளவில் 88,000க்கும் அதிகமான கண் விழி வெண்படலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 36,000க்கும் மேற்பட்ட கண் வெண்படலங்கள், பாகிஸ்தானுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.
எனினும், கோவிட் நோய்த் தொற்றின் பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பணி நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |