திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் வழங்கி வைப்பு
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியினால் இந்த பி.சி.ஆர் இயந்திரம் பெறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 23ம் திகதி குறித்த நிறுவனத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜகத்திடம் அலரி மாளிகையில் வைத்து இன்று இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச திருகோணமலை மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் குறித்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பி.சி.ஆர் இயந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பாடுபட்ட கிண்ணியா தள
வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும்
நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.





இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
