கோட்டா ஹோ கம நூலகத்திலிருந்து யாழ்.பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு (Video)
கோட்டா ஹோ கம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
யாழ். பொதுசன நூலகத்துக்கு வந்த கோட்டா ஹோ கம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளனர்.
அத்துடன் யாழ்.பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையை நினைவு கூறும் வகையில் நூலக வாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரலில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டாகம போராட்டக்குழுவினர் யாழ்.பொதுசன நூலகத்திற்கும், மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதார பிரச்சினை
நாட்டில் பொருளாதார பிரச்சினையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டா ஹோ கம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகின்றது.
ஆனாலும் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய கோட்டா ஹோ கம போராட்டகாரர்கள்
இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
